Announcement:
wanna exchange links? contact me at honey_tamil@ymail.com.
ஏ.வி.ஜி. டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆன்லைனில் நமக்குக் கிடைக்கும் பயமுறுத்தல்களிலிருந்தும் நமக்குத் தெரியாமல் நம் சிஸ்டத்தை வந்தடையும் வைரஸ்களிலிருந்தும் பாதுகாக்கும் வகையில் ஏவிஜி லிங்க் ஸ்கேனர் (AVG Link scanner) என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.ஒவ்வொரு நாளும் குறைந்தது 20 லட்சம் இன்டர்நெட் வெப் சைட்டுகள் மறைந்திருந்து தாக்கும் பயமுறுத்தல்களால் கெடுக்கப் படுகின்றன. இவற்றில் 60 சதவிகிதம் தளங்களை மூடுகின்றன; அல்லது இணையத்தில் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்கின்றன. இதனால் நாம் அந்த தளங்களுக்கு வழங்கப்பட்ட லிங்க்குகள் பயனற்றதாய் அமைந்துவிடுகின்றன. இது போன்ற தளங்களுக்கு ஒருவர் விசிட் செய்தாலே போதும்; அவரின் கம்ப்யூட்டரிலிருந்தும் தகவல்கள் திருடப்படும். அவர் அந்த தளத்தில் எதனையும் கிளிக் செய்ய வேண்டியதே இல்லை. அந்த தளத்திற்குச் சென்று அதன் தகவல்களைப் பார்த்தாலே போதும்.
இது போல ஓர் இணைய தளத்தில் மறைந்திருந்து தாக்கும் விஷமத்தனமான புரோகிராம்களை வழக்கமான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளால் முற்றிலுமாகக் கண்டறிய முடியாது. இவற்றினைக் கண்டறிய புதிய வகை பாதுகாப்பு வளையம் தேவைப்படுகிறது. அதனைத்தான் ஏவிஜி நிறுவனம் தற்போது வழங்கியுள்ளது.
ஏவிஜி லிங்க் ஸ்கேனர் ஒருலிங்க் அல்லது ஒரு யு.ஆர்.எல்.முகவரியினைத் தருகையில் அதன் வெப் சைட்டை ஆய்வு செய்து அதில் இது போன்ற மறைந்திருந்து தாக்கும் பயமுறுத்தல்கள் இருக்கின்றனவா என்று பார்க்கிறது.அப்படி ஒரு பயமுறுத்தல் இருக்கும் பட்சத்தில் இன்டர்நெட் பயன்படுத்துபவரை அந்த தளத்தைத் தங்கள் கம்ப்யூட்டருக்கு இறக்குவதிலிருந்து தடுக்கிறது.இதனால் விஸ்டா மற்றும் எக்ஸ்பியில் செயல்படுபவர்கள் இன்டர்நெட்டில் ஏதேனும் ஒரு லிங்க்கில் கிளிக் செய்தால் உடனே அது பிஷ்ஷிங் போன்ற பயமுறுத்தல்கள் அந்த தளத்தில் உள்ளனவா என்று அறிந்து கொள்ளலாம்.
கூகுள், யாஹூ மற்றும் எம்.எஸ்.என். மூலமாக தளங்களைத் தேடும்போதும் ஏவிஜி லிங்க் ஸ்கேனர் தேடலில் பட்டியலிடப்படும் தளங்களின் பாதுகாப்பு எத்தகையது என்று காட்டுகிறது. அதே போல நாம் புக் மார்க் செய்திடும் தளங்களின் முகவரிகள் மூலம் அந்த தளங்களை ஆய்வு செய்து ஆபத்து உள்ளதா என்று காட்டுகிறது.
இந்நாளில் வைரஸ்கள் மற்றும் பிற மால்வேர்கள் பரவுவதற்குச் சரியான தளங்களாக இணைய தளங்கள் இயங்குகின்றன. இவற்றில் தளங்களிலேயே மறைந்திருந்து தாக்கும் இந்த ஆன்லைன் பயமுறுத்தல்கள் மிகவும் ஆபத்தானவையாகும்.எனவே தான் இவற்றை எச்சரிக்கும் பாதுகாப்பு வளையத்தினை வழங்குவதனை முதல் பணியாக மேற்கொண்டு இந்த ஏவிஜி லிங்க் ஸ்கேனரைத் தந்துள்ளோம் என்று இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த லிங்க் ஸ்கேனர் இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இந்த பாதுகாப்பு வளையத்தின் செயல்பாடுகள் குறித்த உதவிக் கிடைக்கின்றன.இந்த பாதுகாப்பு வளையத்தினை விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா (32/64 பிட் தொகுப்பு) ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
உதவிக் குறிப்புக்களுக்கு : இங்கே கிளிக் செய்யவும்
இதைவிட மெக்கபி ஏற்கனவே சைட் அட்வைஸர் என்ற மென்பொருளை இலவசமாக தருகிறது.இதில் மிக கூடுதல் வசதி வேண்டும் என்றால் மட்டும் பணம் கொடுத்து ப்ரபெசனல் பதிப்பு வாங்க வேண்டும்.

மற்றபடி இதனை அப்படியே இலவசமாக பாவிக்க எந்த கட்டணமும் இல்லை.இதில் ஒவ்வொரு தளத்துக்கும் நுழைய முன்னரே சிவப்பு பச்சை என அந்த தளத்தின் நம்பகத்தனமையை காட்டி விடும்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
இன்டர்நெட் தளத்தில் இலவசமாக நமக்குப் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றின் பயன்பாடுகள் பலவகையாகும். இலவச டிவி, ஆடியோ மற்றும் வீடியோ வசதி, கம்ப்யூட்டரில் ஆட்டோ ஹாட் கீ அமைப்பு என இவை பல்வேறு வகைகளாகும். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.* டவுண்லோட் மேனேஜர்
இன்டர்நெட்டினை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு புரோகிராமையாவது டவுண்லோட் செய்கிறார்கள் என ஓர் ஆய்வு கூறுகிறது. எத்தனை வைரஸ் பயமுறுத்தல் இருந்தாலும் இலவசம் மற்றும் புதிய பயன்பாடு என்று தெரிந்தவுடன் அந்த புரோகிராமினை இறக் கிப் பார்க்கத்தான் மனசு துடிக்கிறது. இவ்வாறு டவுண் லோட் செய்திடும் புரோகிராம் களை பலர் தங்கள் கம்ப்யூட்டர் டிரைவ் களில் அப்படியே சாப்ட்வேர் ஸ்டோர் ரூம் தயார் செய்து வைத்துவிடுகின்றனர். 45 சதவிகிதம் பேரே பயன்படுத்துகின்றனர்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
* ஒர்பிட் டவுன்லோடர்
இதில் டவுண் லோட் சம்பந்தப்பட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. டவுண்லோட் செய்யப்படும் புரோகிராமினைப் பிரித்து டவுண்லோட் செய்வது, ஒரே பைலுக்கு பல மிர்ரர் பைல்களை உருவாக்குவது, யு–ட்யூப் போன்ற வீடியோ தளங்களிலிருந்து பிளாஷ் வீடியோக்களை டவுண்லோட் செய் வது, இதற்கான பிட் டாரண்ட் சப்போர்ட் என இது தரும் வசதிகள் நீண்டு கொண்டே போகின் றன. டவுண்லோட் செய்யப்படும் புரோகிராம் ஸிப் பைலாக இருந் தால் அதில் என்ன என்ன பைல்கள் உள்ளன என்று பார்த்து நமக்குத் தேவயான பைல்களை மட்டும் டவுண்லோட் செய்திடும் வசதி குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாகும்.
இதனைப் பயன்படுத்தி டவுண்லோட் செய்தவர்கள் அளித்துள்ள கருத்துக்களை இந்த தளத்தின் சமுதாய தளப்பிரிவில் படிக்கலாம். மிகவும் பயனுள்ளவையாகவும் இந்த புரோகிராமினைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் உள்ளன. அண்மையில் தரப்படும் இந்த FDM புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரை முழுவதுமாக ஸ்கேன் செய்து நீங்கள் வைத்துள்ள புரோகிராம்கள் அனைத்தும் லேட்டஸ்ட் புரோகிராம்களா என்று சோதனை செய்து அப்படி இல்லை என்றால் அவற்றை அப்டேட் செய்வதற்கான வழிகளையும் தருகிறது. ஆனால் FDM போல கூடுதலான வசதிகள் இதில் இல்லை.தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
2.உங்கள் இஷ்டத்திற்கு ஷார்ட் கட் கீ
கம்ப்யூட்டர் வந்ததிலிருந்து நேரம் மிச்சம் செய்வதற்கும், குறைந்த உழைப்பிற்கும் பல வழிகளை நாம் பெற்று வருகிறோம். அந்த வகையில் கீ போர்டு ஷார்ட் கட் கீகளை அந்த அந்த அப்ளிகேஷன் புரோகிராம்களே தந்து வருகின்றன. எம்.எஸ். ஆபீஸ் மற்றும் பிரவுசர்கள் அனைத்திற்கும் ஹாட் கீகள் உள்ளன.
இருப்பினும் நம் வசதிக்கு நாம் விரும்பும் வகையில் இந்த ஆட்டோ ஹாட் கீகள் அமைந்தால் இன்னும் வசதியாக இருக்கும் என்று நாம் எண்ணுகிறோம், விரும்புகிறோம். அந்த வகையில் நமக்கு உதவிட கிடைப்பது Auto Hotkey என்னும் அப்ளிகேஷன் புரோகிராம். இதன் மூலம் எந்த கீ இணைப்புகளிலும் நீங்கள் விரும்பும்செயல்பாட்டினை அமைத்துப் பயன்படுத்தலாம். அத்துடன் இந்த புரோகிராம் உங்கள் கீ போர்டு மற்றும் மவுஸ் பயன்பாட்டினை பதிவு செய்து அவற்றை நீங்கள் விரும்பும் எத்தனை முறையும் சுருக்கமாகச் செயல்படுத்த உதவிடுகிறது.
இந்த புரோகிராம் தன்னுடைய ஸ்கிரிப்டிங் மொழியைப் பயன்படுத்துகிறது. இதை உணர்ந்து பயன் படுத்துவதும் எளிது. தெரிந்து கொண்டால் மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் நம்மால் ஆட்டோ ஹாட் கீ களை அமைக்கலாம். இந்த ஸ்கிரிப்டிங் மொழியைக் கட்டாயம் கற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்பதில்லை. இந்த புரோகிராம் தரும் ஆட்டோ ஸ்கிரிப்ட் ரைட்டர் உங்களுக்காக மேக்ரோக்களைப் பதிவு செய்கிறது.ஆட்டோ ஹாட் கீ புரோகிராமினை இன்ஸ்டால் செய்தவுடன் உங்களுக்குப் பிடித்த அப்ளிகேஷன் புரோகிராம்களைத் திறக்க ஆட்டோ ஹாட் கீகளை உருவாக்கலாம். எடுத்துக் காட்டாக Windows + W இணைந்து எம்.எஸ்.வேர்டைத் திறக்குமாறு செய்திடலாம். இப்படியே பல புரோகிராம்களுக்கான ஹாட் கீகளை அமைக்கலாம். ஆனால் இந்த புரோகிராமின் முழு பயனை அடைய இதன் ஸ்கிரிப்டிங் மொழியை புரிந்து கொள்வது நல்லது. இதற்கான வழிகாட்டியும் இந்த தளத்தில் உள்ளது. நீங்கள் உருவாக்கும் ஹாட் கீகளை எடுத்துச் சென்று பயன்படுத்தும் வசதியும் உள்ளது. ஒவ்வொரு ஸ்கிரிப்டையும் ஒரு இ.எக்ஸ்.இ. பைலாக உருவாக்கலாம். அதன் மீது ரைட் கிளிக் செய்து Compile script என்பதில் கிளிக் செய்தால் அது ஒரு இ.எக்ஸ்.இ. பைலாக உருவாகும். இந்த பைலை எந்த பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்.
இவை அனைத்தும் புதிய கம்ப்யூட்டரில் சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொண்டு உங்களுக்கு உதவிடும். Exit கொடுத்தால் இவற்றிலிருந்து வெளியேறலாம். புதிய அந்த கம்ப்யூட்டரில் எந்த பாதிப்பையும் ஏற்படுத் தாது.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
இதே போன்ற இன்னொரு புரோகிராம் உள்ளது. ஆனாலும் ஆட்டோ ஹாட் கீ போல அனைத்து வசதிகளையும் தரும் வேறு புரோகிராம் எதுவும் இல்லை என்றே கூறலாம்.
தரவிறக்கம் செய்ய : கிளிக் செய்யவும்
3.இலவச டிவி புரோகிராம்
இன்டர்நெட் இணைப்பு வசதி குறைந்த கட்டணத்தில் கிடைப்பதால் (மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கு மிக மிக அதிகம்தான்) பலரும் இதன் மூலம் அனைத்து வசதிகளையும் பெற எண்ணுகின்றனர். அவ்வகையில் டிவி மற்றும் திரைப்படங்களையும் பார்க்க துடிக்கின்றனர். உங்களிடம் மத்திய நிலை வேகத்தில் இன்டர்நெட் இணைப்பு வசதி இருந்தால் இது சாத்தியமே. இந்த வகையில் நமக்கு உதவிடுவது Joost என்னும் புரோகிராம் ஆகும்.
முற்றிலும் இலவச டிவி தரும் புரோகிராம் என இதனைக் கூறலாம். மேலே குறிப்பிட்டுள்ள தளத்திலிருந்து Joost புரோகிராமினை டவுண்லோட் செய்து கொள்ளவும். இந்த கிளையண்ட் புரோகிராம் மூலம் உலகெங்கும் உள்ள டிவி நிகழ்ச்சிகளைக் காண முடிகிறது. (ஆனால் எத்தனை நிகழ்ச்சிகளை நாம் பார்த்து புரிந்து ரசிக்க முடியும் என்பது வேறு விஷயம்) இதன் மூலம் கிடைக்கும் வீடியோவின் தன்மை அவ்வளவு சிறப்பாக இருக்குமா என்பது நீங்கள் பயன்படுத்தும் சாதனங்களைப் பொறுத்து உள்ளது. இருந்தாலும் பார்க்க சகிக்க முடியாத அளவில் இது அமைவதில்லை.இது தரும் சேனல்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் அசந்து போவீர்கள். மொத்தம் 480 சேனல்களைத் தருகிறது. இதனை வகை வகையாகப் பிரித்தும் பார்க்கலாம். காமெடி, கார்ட்டூன், டாகுமெண்டரி என வகைகளும் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு சேனலிலும் உங்களுக்குப் பிடித்த படக் காட்சிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை இணைத்து பார்க்கும் வகையில் அமைத்துக் கொள்ள வசதி தரப்பட்டுள்ளது.
இந்த Joost புரோகிராமின் சிறப்பு நாம் கேட்பதை வழங்குவதுதான். நாம் விரும்புவதை நாம் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் தருகிறது. எப்போது வேண்டுமானாலும் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதனை மூடிவிடலாம். ஆனால் ஒரு சின்ன பிரச்னை உள்ளது. விளம்பரங்களையும் நாம் பார்த்தே ஆக வேண்டும். ஏனென்றால் அவை தரும் நிதி பலத்தில் தான் இந்த இலவச டிவி புரோகிராம் இயங்குகிறது. அதனால் என்ன! இங்கு நாம் கேபிளுக்குப் பணம் கட்டிப் பார்க்கையில் எத்தனை விளம்பரங்கள் வருகின்றன என்று நீங்கள் அங்கலாய்ப்பது தெரிகிறது. எனவே குறுக்கிடும் விளம்பரங்களுக்குப் பழகிய நமக்கு Joost தரும் விளம்பரங்கள் ஒரு பொருட்டே அல்ல. இதே போல இன்னொரு தளம் இதுவரை எனக்குத் தென்படவில்லை.
தள முகவரி :இங்கே கிளிக் செய்யவும்
4.சிடிக்களில் எழுத
நம்முடைய கம்ப்யூட்டர்களில் சிடி மற்றும் டிவிடி ரைட்டர்களை நிறுவுகையில் அதனுடன் வரும் நீரோ சிடி ரைட்டிங் புரோகிராமுடன் பழகிப் போன நமக்கு அதே போல மற்ற புரோகிராம்கள் குறித்து எண்ணுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. இருந்தாலும் நீரோ போலவே, அதன் வசதிகளுக்கு இணையான வசதிகளைத் தரும் இலவச புரோகிராம்களும் இருக்கின்றன என்பதுதான் உண்மை. சிடி மற்றும் டிவிடிக்களில் தகவல்களை எழுத CD Burner XP என்றொரு புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. சிடி, டிவிடி மற்றும் புளுரே டிஸ்க்குகளில் நீரோ போலவே அனைத்து வகை தகவல்களையும் எழுதுகிறது. ஐ.எஸ்.ஓ. இமேஜ்களை சிடிக்களில் அமைத்துத் தருகிறது. ஆடியோ சிடிக்களை உருவாக்குகிறது.
இப்படி நீரோ நமக்குத் தரும் அனைத்து செயல்பாடுகளையும் தருகிறது. இதனுடைய இன்டர்பேஸும் மிகவும் எளிமையானதாக இருக்கிறது. ஜஸ்ட் ட்ராக் அண்ட் ட்ராப் என்ற முறையில் அமைந்துள்ளது. 2.8 எம்பி அளவிலான இந்த பைல் அநாவசியமாக எந்த தகவலையும் எழுதிவைப்பதில்லை. சிடிக்களின் இடத்தை வேஸ்ட் செய்வதில்லை. இதனைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டீர்கள் என்றால் நிச்சயம் நீரோ புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்வது குறித்து யோசிக்கத் தொடங்கிவிடுவீர்கள் என்பது உறுதி.தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
5. உங்கள் கம்ப்யூட்டரைத் தூக்கிச் செல்ல
நம் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை நாம் செல்லும் இடமெல்லாம் தூக்கிச் செல்ல முடியாது. ஏன், லேப் டாப் கம்ப்யூட்டரைக் கூடத் தூக்கிச் செல்வது எளிதான காரியம் இல்லை. யு.எஸ்.பி. டிரைவைத்தான் எடுத்துக் செல்கிறோம். இதனால் நாம் வேறு ஒருவரின் அல்லது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில் அதன் டெஸ்க் டாப், சூழ்நிலை ஆகியவை நமக்கு அந்நியமான ஒரு வேலை தளத்தைத் தருகிறது. அப்படியானால் நாம் பாக்கெட்டில் போட்டுச் செல்லும் யு.எஸ்.பி. டிரைவில் நம் கம்ப்யூட்டரின் சூழ்நிலையை நமக்குத் தரும் வகையில் அமைத்திட முடியுமா? ஆம், முடியும்.
இதற்கு ஒரு வழியாகத்தான் MojoPac என்னும் புரோகிராம் நமக்குக் கிடைக்கிறது. . மிக எளிதாக இதனை உங்கள் யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து கொள்ளலாம். நீங்கள் எந்த கம்ப்யூட்டரில் உங்கள் டிரைவை இணைத்துச் செயல்படுத்தத் தொடங்கினாலும் அது உடனே உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் சூழ்நிலையைத் தருகிறது. இதனால் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இந்த MojoPac புரோகிராம் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி ஒரு புதிய சூழ்நிலையை உருவாக்குகிறது. உங்கள் யு.எஸ்.பி. டிரைவ் உங்களின் இ: டிரைவாக மாறுகிறது.இதனால் எந்த கம்ப் யூட்டரில் இதனைப் பயன்படுத்துகிறீர்களோ அதில் உள்ள புரோகிராம்களுக்கு உங்களுக்கு அனுமதி கிடைக்காது. ஆனால் அதே நேரத்தில் உங்களுக்குத் தேவயான புரோகிராம்களை நீங்கள் பதிந்து இயக்கிக் கொள்ளலாம். இந்த புரோகிராம்கள் நீங்கள் எங்கெல்லாம் இந்த டிரைவை இணைத்துப் பயன் படுத்துகிறீர்களோ அங்கெல் லாம் கிடைக்கும்.
இதன் வேகத்தை அதிக பட்சம் பயன் படுத்த வேண்டும் என்றால் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டரைத் திறந்து அதில் யு.எஸ்.பி. டிரைவ் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் பிராபர்ட்டீஸ் கிளிக் செய்திடவும். இதில் ஹார்ட்வேர் என்னும் பகுதியில் யு.எஸ்.பி. டிரைவைத் தேர்ந்தெடுத்து அதில் புராபர்ட்டீஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் ஏற்கனவே ே “Optimize for quick removal” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இதற்குப் பதிலாக “Optimize for Performance” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். MojoPac போல செயல்படும் புரோகிராம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
தரவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யவும்
ஆனால் நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களை எளிதில் எடுத்துச் சென்று பயன்படுத்த Portable Apps Suite என்னும் புரோகிராம் கிடைக்கிறது.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
இலவசமாய் எவ்வளவோ இணையத்தில் கிடைக்கின்றன.மேலே தரப்பட்டுள்ள மென்பொருட்களை ஏற்கனவே நீங்கள் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது தெரியாமலும் இருக்கலாம். உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தரவிறக்கி கொள்ளுங்கள்.
சென்ற வருடம் கிடைத்த பாடங்களிலிருந்து தமிழ் சினிமா எதையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. 2008 வெளியான மொத்த திரைப்படங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 84. அதில் கரை சேர்ந்தவை ஏழே ஏழு.தமிழ் சினிமாவின் வியாபாரத்தை விஸ்தரிக்கும் என்று எதிர்பார்த்த குசேலன், பீமா, குருவி, ஏகன், சத்யம் என மெகா பட்ஜெட் படங்கள் அனைத்தும் பெருத்த நஷ்டத்தை சந்தித்தன. தமிழ் சினிமாவை ஓரளவு காப்பாற்றியவை என்றால் அது புதியவர்களின் சமரசமற்ற முயற்சிகளான சுப்பிரமணியபுரம், அஞ்சாதே, சரோஜா போன்ற பட்ஜெட் படங்கள் மட்டுமே.
சினிமாவின் முகத்தை ஹைடெக்காக மாற்றப் போவதாகக் கூறிய கார்ப்பரேட் ஜாம்பவான்கள் ஒருவர் பாக்கி இன்றி அனைவரும் மண்ணை கவ்வினர்.
எளிமையான கதை, சிறந்த திரைக்கதை, யதார்த்தத்தை மீறாத காட்சிகள். இவை இருந்தால் ஸ்டார் வேல்யூ இல்லாத படங்களும் வெற்றி பெறும் என்பது சென்ற வருடம் கிடைத்த பாடம். இந்த வருடத்தின் முதல் ஆறு மாத கால தமிழ் சினிமா வியாபாரம் அந்த பாடத்தை மீண்டும் உண்மையாக்கியிருக்கிறது.
ஜூன் 30 வரை ஏறக்குறைய 51 படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் அனைத்து தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து கொடுத்தவை ஒன்பது. சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் நம்ப முடியாத முன்னேற்றம். ஆனால் இது போதுமா?

பஞ்ச் டயலாக், பரபர சண்டைக் காட்சிகள், கால் மணிக்கு ஒரு குத்துப் பாட்டு என ஸ்டார் வேல்யூ ஃபார்முலாவில் வந்த ஏறக்குறைய அனைத்துப் படங்களும் இந்த வருடமும் பணால். விஜய்யின் வில்லு, விஷாலின் தோரணை சிறந்த உதாரணங்கள். பழைய ஃபார்முலாவில் வெளிவந்த மரியாதைக்கும் வரவேற்பில்லை.இந்த ஆறு மாத காலத்தில் வெற்றியை அறுவடை செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள். முதலில் வெண்ணிலா கபடிக்குழு. ஸ்டார் வேல்யூ இல்லாத சராசரி நடிகர்களால் உருவான படம். இயக்குனர் சுசீந்திரனுக்கும் இதுவே முதல் படம். எளிமையான கிராமத்து இளைஞர்களின் கபடி ஆசையின் வழியாக அவர்களின் வாழ்க்கையை காட்சிப்படுத்திய இப்படம் அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்டது. இதன் வெற்றி யதார்த்த சினிமாவுக்கான இருப்பை உறுதி செய்தது.

ஆவி கதையுடன் வந்த யாவரும் நலம் இந்த வருடத்தின் எதிர்பாராத ஆச்சரியம். மாதவன் என்ற ஹீரோ நடித்திருந்தாலும் இயக்குனரின் பழமை தவிர்த்த புதுமை சிந்தனையே படம் வெற்றியின் படிக்கட்டில் ஏற உதவியது.சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த சசிகுமாரின் தயாரிப்பில் வெளிவந்த படம் பசங்க. பதினாலு வயது சிறுவர்கள் நடித்த இந்தப் படம் ஸ்டார் வேல்யூ இல்லாமலே பாக்ஸ் ஆபிஸை கலங்கடித்தது.
பத்து இயக்குனர்கள் நடித்த மாயாண்டி குடும்பத்தார் பி அண்டு சி சென்டர்களில் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது. நஷ்டத்தை சந்திக்காத படங்களின் வரிசையில் இந்தப் படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். சமீபத்தில் வெளியான நாடோடிகளும் ரசிகர்களின் பேராதரவுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
நாம் மேலே பார்த்த ஐந்து படங்களும் இரண்டிலிருந்து நான்கு கோடிக்குள் தயாரானவை. பிரமாண்டமான அரங்குகள், கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், தேவையற்ற சண்டைக் காட்சிகள் போன்ற தமிழ் சினிமாவின் சாபக் கேடுகள் ஏதுமற்றவை. எளிமையான கதையையும், யதார்த்தமான காட்சிகளையும், அரிதாரம் பூசாத நடிகர்களையும் நம்பி எடுக்கப்பட்டவை.
இந்த ஆறுமாத காலத்தில் வழக்கமான ஃபார்முலாவில் ஜெயித்த படங்கள் நான்கு. படிக்காதவன், சிவா மனசுல சக்தி, அயன், மாசிலாமணி. இவற்றில் படிக்காதவன், சிவா மனசுல சக்தி, மாசிலாமணி ஆகியவை வெற்றி பெற்றதில் அப்படத்தின் தயாரிப்பாளர்கள் தண்ணியாக செலவழித்த விளம்பர பணத்துக்கு கணிசமான பங்குண்டு.
இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் என்றால் அது அயன். கே.வி.ஆனந்தின் இப்படம் தமிழ் சினிமாவுக்கு பழக்கமான கடத்தல் கதையை பிரமாண்டமாக காட்டியது. சூர்யாவின் நடிப்புக்கும், தொழில்நுட்பத்துக்கும் இந்த வெற்றியில் கணிசமான பங்குண்டு.
நல்லவனான ஹீரோ, கெட்டதை மட்டுமே செய்யும் வில்லன், டூயட்டுக்கு ஒரு ஹீரோயின் என்ற வழக்கமான அம்மாஞ்சித்தனங்கள் இந்த வருடம் வெற்றிபெற்ற படங்களில் இல்லை. விதிவிலக்குகள் படிக்காதவனும், மாசிலாமணியும்.
ஒரு படத்தின் வெற்றி இயக்குனரின் கையில் இருக்கிறது. சிலர் நம்பிக் கொண்டிருப்பதுபோல் ஹீரோவோ, பிரமாண்டமோ அல்ல படத்தின் வெற்றியை தீர்மானிப்பது. எளிமையான கதையிலேயே எவரெஸ்டை தொடலாம். புதியவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். உணர்ந்து திருந்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.
இருந்தாலும் இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில் எந்தவித அச்சமும் இன்றி செயல்படவும் வாய்ப்பு உள்ளது. இதற்கு சில டூல்ஸ் புரோகிராம்களை கம்ப்யூட்டரில் பதிந்து தொடர்ந்து சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட படி இருக்க வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.
1. ஆன்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும். அந்த புரோகிராமினை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
2. ஆன்டி ஸ்பைவேர்: ஒன்று அல்லது இரண்டு ஆன்டி ஸ்பைவேர் புரோகிராம்களைப் பதிந்து வைத்து இயக்க வேண்டும். பொதுவாக ஆன்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து இவை கிடைக்கும். மைக்ரோசாப்ட் விஸ்டாவுடன் விண்டோஸ் டிபன்டர் மற்றும் ஸ்பை ஸ்வீப்பர் புரோகிராம்களைத் தருகிறது.
3. இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். விஸ்டாவுடன் இது தரப்படுகிறது. மற்றவர்கள் ஸோன் அலார்ம் போன்ற பயர்வால்களைப் பயன்படுத்துவது நல்லது.
4. பயர்வால் ஒன்று போதும். இரண்டு இன்ஸ்டால் செய்தால் தலைவலிதான். அதே போல்தான் ஆன்டி வைரஸ் புரோகிராமும்.
5. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்கள் கம்ப்யூட்டரில் அமைந்திட அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பில் ஏற்படும் ஓட்டைகளை அவ்வப்போது கண்டறிந்து மைக்ரோசாப்ட் இவற்றின் மூலம் அடைத்து வருகிறது.6. ரௌட்டர் இல்லாமல் பிராட்பேண்ட் கனெக்ஷன் வைத்துக் கொள்ளக் கூடாது. அது வயர்டு அல்லது வயர்லெஸ் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
7. ஒரு பைல் உங்களுக்கு வந்துள்ளதா? அல்லது நீங்களே கொண்டு வந்திருக்கிறீர்களா? அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆன்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை Virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது அட்டாச்மென்ட் scan@virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.
8. சிடியைப் போட்டால் ஆட்டோ ரன் மற்றும் ஆட்டோ பிளே செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறதா? அவற்றை நிரந்தரமாக நிறுத்தும் வழிகளை மேற்கொள்ளவும். ஆட்டோ ரன் நிறுத்த எக்ஸ்பி சிஸ்டத்தில் கை வைக்க வேண்டும். ஆட்டோ பிளே நிறுத்த ட்வீக் யு.ஐ. (Tweak UI) பயன்படுத்தலாம்.
9. விண்டோஸ் இயக்கத்தின் போது பல புரோகிராம்களை பின்புலத்தில் இயக்கிக் கொண்டு இருக்கும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைப் பயன்படுத்தி என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதன் மேல் ஒரு கண் இருக்க வேண்டும்.
10. வைரஸ் குறித்த எந்த கேள்விக்கும் சந்தேகத்திற்கும் மைக்ரோசாப்ட் பதில் அளிக்கத் தயாராய் இருக்கிறது. எனவே வைரஸ் பிரச்னை இருந்தால் உடனே தொடர்பு கொள்ளவும்
11. எண்களும் எழுத்துக்களும் கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்தவும். நீளமாக இருந்தால் நல்லதுதான். உங்களால் அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க இயலவில்லை என்றால் www.passpub.com என்ற தளத்தை அணுகவும்.
12. பாஸ்வேர்ட்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
13. ஒரே பாஸ்வேர்டினையே அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொன்றுக்கும் மாறான பாஸ்வேர்ட் பயன்படுத்தவும்.
14. சிக்கலான மாஸ்டர் பாஸ்வேர்ட் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தளத்திற்கும் அதனை சிறிய அளவில் மாற்றிக் கொள்ளலாம்.
15. 200 சதவிகிதம் சரியென்று பட்டால் மட்டுமே இமெயில் உடன் வரும் லிங்க்குகளை கிளிக் செய்திடவும். இல்லை என்றால் வேண்டவே வேண்டாம்.16.பொதுவான வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களின் பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம்.
17. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டுமே பிஷ்ஷிங் பில்டர்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றை இயக்க நிலையில் வைக்கவும்.
18. உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால் அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க் வருகிறதா? உடனே அதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் நிரந்தரத் தொல்லை தான்.
19. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகவும் பிரபலமான பிரவுசர் தான். அதனால்தான் ஹேக்கர்களும் அந்த வழியிலேயே உள்ளே புக எண்ணுகின்றனர். எனவே மாறுதலுக்காக ஆப்பரா அல்லது பயர்பாக்ஸ் பயன்படுத்துங்கள்.
20. ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை நிரந்தரமாக அணைத்து விடுங்கள். பிரவுசர்கள் உங்களைக் கேட்காமல் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்க இது உதவுகிறது. எனவே இது இயங்கக் கூடாது.
21. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை வெப்சைட்டில் தரப்போகிறீர்களா? அந்த தளம் பாதுகாப்பானது தானா என்று பார்க்கவும். அதன் முகவரியில் ‘https’ என எஸ் சேர்த்து இருக்க வேண்டும். அல்லது அட்ரஸ் பாரில் அல்லது வேறு இடங்களில் பூட்டு அடையாளம் இருக்க வேண்டும்.
22. செக் பாயிண்ட்டின் புதிய ஸோன் அலார்ம் போர்ஸ் பீல்ட் முற்றிலும் பாதுகாப்பான இன்டர்நெட் பிரவுசிங்கை அளிக்கிறது. பிரவுசருக்கும் உங்கள் கம்ப்யூட்டரில் அது ஏற்படுத்தும் மாற்றங்களுக்கும் இடையே ஒரு படிமத்தை உருவாக்குகிறது.
23. முன்பெல்லாம் குக்கிகள் வழியாகத்தான் வைரஸ்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போது குக்கிகள் நம் வேலையைஇன்டர்நெட் பிரவுசிங்கில் எளிதாக்குகின்றன. இல்லை என்றால் நம் பெயரையும் தகவல்களையும் ஒவ்வொரு முறையும் ஒரு தளத்திற்கு நினைவு படுத்த வேண்டும். இருப்பினும் ஆன்டி ஸ்பைவேர் தொகுப்பு மோசமான குக்கிகளை எடுத்துவிடுவதால் அத்தொகுப்புகளை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்.
24. உருவாக்கும் ஒவ்வொரு பைலுக்கும் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கவும். இதற்கான வழிகள் இப்போது ஆபீஸ்தொகுப்பில் தரப்பட்டுள்ளன.
26. பொதுவான கம்ப்யூட்டர்கள் மூலம் நீங்கள் பிரவுசிங் செய்திடும் நிலை ஏற்பட்டால் உங்கள் பிரவுசிங் பற்றிய தகவல்களை அழித்து விட்டு வெளியேறுங்கள். அதே போல அத்தகைய கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்டுகளை சேவ் செய்து வைக்காதீர்கள்.
27. உங்களுக்கு ஒரு சேவையை வழங்குகையில் இணைய தளங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உறுதி செய்திட உங்கள் இமெயில் முகவரிகளைக் கேட்கும். 10 நிமிடத்திற்குள் செய்தி அனுப்பப்படும் என்று செய்தி வரும். அப்போது தற்காலிக இமெயில் முகவரி தரும் 10minutemail.com போன்ற தளங்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தளம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் ஈ-மெயில் முகவரிகளை உங்களுக்கு வழங்கும்.
28. உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்கள் உற்றவர்களுக் கும் நண்பர்களுக்கு மட்டுமே தரவும். இலவச இமெயில் முகவரிகளைத் தருவதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் லைவ் மெயில், யாஹூ இருக்கும்போது ஸ்டெப்னி இமெயில் முகவரிகளை நிறைய வைத்துக் கொள்ளலாம்.
29. மொத்தமாக வரும் ஸ்பேம் மெயில்கள் உங்களுக்குத் தேவையான செய்தியைக் கொண்டு வந்திருந்ததாக அறிந்தாலும் அவற்றைப் படிக்க வேண்டாம். ஏனென்றால் திறந்து படித்தால் உங்களுடைய முகவரி அவர்களிடம் சிக்கி விடும்.
30. இமெயில்களை ஸ்பேம் பில்டர் கொண்டு பயன்படுத்தவும். தண்டர்பேர்ட் தன்னிடத்தே ஒரு நல்ல ஸ்பேம் பில்டரைக் கொண்டுள்ளது. அவுட்லுக் 2003 மற்றும் அவுட்லுக் 2007 மைக்ரோசாப்டின் ஸ்மார்ட் ஸ்கிரீன் என்னும் பில்டரைப் பயன்படுத்துகின்றன. இது உங்கள் மெயிலைப் படித்து அதன் தகவல்களிலிருந்து அது ஸ்பேம் மெயிலா என அறிந்து அழிக்கிறது. இவ்வகையில் ஜிமெயில் கிட்டத்தட்ட எந்த குறைபாடும் இன்றி உள்ளது.
1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகில் உதித்த சௌரவ் கங்கூலி என்ற 'பெங்கால் டைகர்', ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் "தாதா"வின் கிரிக்கெட் வாழ்வு, அவரே எதிர்பார்த்ததைப்போல இந்தியா ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தியது மூலம் மகிழ்ச்சிகரமாக நிறைவடைந்தது.தோனி தலைமையில் இந்திய அணி அடுத்தக் கட்டத்தை நோக்கி வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்த உயர்விற்கு தனது தலைமைப் பொறுப்பின் கீழ், நியாயமற்ற அவப்பெயர்களுடன், அடித்தளமிட்டுக் கொடுத்த கங்கூலியை நாம் மறக்க முடியாது.
குறிப்பாக ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் நாக்பூர் டெஸ்டிற்கு முன்னால் பேசிய வீர வசனத்தில், நாங்கள் டெஸ்டை வென்று கங்கூலிக்கு மகிழ்ச்சியான ஓய்வு தினங்களை மறுப்போம் என்றார். அவரது பேச்சு வெறும் பேச்சு மட்டுமே என்பது நிரூபிக்கப்பட்டு இந்த வெற்றி கங்கூலிக்கும் அவரது மன உறுதிக்கும், அவர் கிரிக்கெட்டை ஆடிய விதத்திற்கும், அவர் அணியை வழி நடத்திய திறனிற்கும் ஒரு சிறந்த பரிசாக அமைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பேட்ஸ்மெனாக கருதப்படும் டான் பிராட்மேன் போலவே தன் கடைசி இன்னிங்சில் கங்கூலி ரன்கள் எடுக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. ஆனால் நாக்பூர் டெஸ்ட் முதல் இன்னிங்சில் அவர் எடுத்த 89 ரன்கள் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளது என்றால் மிகையாகாது.
கங்கூலியைப் பற்றி உலக கிரிக்கெட்டில் பரந்துபட்ட கருத்துக்கள் வளைய வந்துள்ளன. அவரால் பவுன்சர்களை எதிர்கொள்ள முடியாது என்று கூறுபவர் உளர், வேறு சிலருக்கோ அவர் "ஆஃப் திசையின் கடவுள்" - அதாவது ஆஃப் திசையில் அவர் ஆடும் டிரைவ்கள், கட் ஷாட்கள் ஆகியவை அவரை டேவிட் கோவருக்கு பிறகு அழகாக விளையாடும் இடது கை ஆட்டக்காரர் என்று அழைக்க வைத்தது.நம் அனைவருக்கும் கங்கூலியின் ஆக்ரோஷமான அணித் தலைமைப் பொறுப்பு பிடித்தமானது, அவரது அணித் தலைமையில் அதிக டெஸ்ட் போட்டிகளை வென்று இந்திய அணியை தற்போது இருக்கும் உயர்வு நிலைக்கும், போட்டி உத்வேகத்திற்கும், ஆக்ரோஷத்திற்கும் அடிக்கல் நாட்டியது என்ற வகையில் பலருக்கும் பிடித்தமான ஒரு வீரர் கங்கூலி. வேறு சிலருக்கோ அவர் ஃபீல்டிங் செய்ய லாயக்கற்றவர். இவ்வாறாக கங்கூலி பற்றிய கருத்துக்கள் ஒரு புதிர்ப்பாதையில் பயணிப்பது போல் இருந்து வந்துள்ளன.
இந்தியாவின் மிகச்சிறந்த அணித் தலைவர் கங்கூலி என்பதை உலகின் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் மறுக்க முடியாது. அவரை பாராட்டிய இலங்கை வீரர்களான சங்ககாரா, ஜெயவர்தனே, ரணதுங்கா ஆகியோர் அவரது தலைமைப் பொறுப்பு பற்றி புகழ்ந்து கூறியுள்ளனர். ஒரு வீரராக கங்கூலியை நாம் முதலில் பார்ப்போம்:
ஒரு வீரராக கங்கூலி
1996ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக லாட்ஸில் அவர் தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே முதல் சதத்தை எடுத்து கிரிக்கெட் உலகிற்கு தன் வருகையை அறிவித்தார். பிறகு அடுத்த டெஸ்டில் மீண்டும் ஒரு சதம், இப்படித்தான் அவர் துவங்கினார்.
இவருடன் திராவிடும் தன் முதல் டெஸ்டை விளையாடினார். இந்தியாவின் மிகச்சிறந்த பேட்டிங் சேர்க்கை அமைந்தது அப்போதுதான்: சச்சின், கங்கூலி திராவிட். டெஸ்ட் போட்டியில் இவ்வாறு அபாரமாக துவங்கியவர், ஒரு நாள் போட்டிகளில் அப்போதைய கேப்டன் அசாருதீனின் முடிவின் படி சச்சின் டெண்டுல்கருடன் களமிறக்கப்பட்டார். பிற்பாடு சச்சினும் கங்கூலியும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அனைத்து நாடுகளும் அஞ்சும் ஒரு துவக்க ஜோடியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.அப்போதைய உலக சாம்பியன் அணியான இலங்கை அணிக்கு எதிராக 113 ரன்களை விளாசி தன் முதல் சதத்தை எட்டினார். அதன் பிறகு அதே ஆண்டில் சகாரா கோப்பை கிரிக்கெட்டில் 4 ஒரு நாள் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது பெற்று தன் பேட்டிங் மற்றும் பந்து வீச்சினால் இந்திய அணியை தொடரை வெல்லச் செய்தார்.
இந்த தொடரில்தான் அவரது சிறந்த ஒரு நாள் போட்டி பந்து வீச்சு அமைந்தது. 10 ஓவர்களில் வெறும் 16 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒன்றிரண்டு சதங்களை அடித்தார். ஆனால் இவரது போராட்ட குணம் கிரிக்கெட் உலகிற்கு தெரிய வந்த போட்டி டாக்காவில் நடந்த சுதந்திரக் கோப்பை இறுதிப் போட்டியே. பாகிஸ்தான் நிர்ணயித்த 315 ரன்கள் இலக்கை எதிர்த்து களமிறங்கிய இந்திய அணியை தன் 124 ரன்கள் அதிரடி இன்னிங்சினால் வெற்றி பெற வைத்தார். 300 ரன்களுக்கும் அதிகமான இலக்கை இந்தியா முதன் முதலாக துரத்தி வெற்றி பெற்றது அப்போதுதான். அதன் பிறகு சில 300 ரன்களை இந்தியா துரத்தும் போதும், இலக்காக நிர்ணயிக்கும்போது கங்கூலியின் பங்கு அபரிமிதமானது.
1999ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இலங்கைக்கு எதிராக 158 பந்துகளில் 17 பவுண்டரிகள் 7 சிக்சர் சகிதம் 183 ரன்களை விளாசினார் கங்கூலி. உலகக் கோப்பை வரலாற்றில் இது இரண்டாவது அதிக பட்ச தனிப்பட்ட ரன் எண்ணிக்கையாகும். ராகுல் திராவிடும் கங்கூலியும் இணைந்து குவித்த 318 ரன்கள் எந்த ஒரு விக்கெட்டிற்கு இடையேயும் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.
அதன் பிறகு ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியைத் தழுவியது. ஒரு நாள் போட்டிகளில் அந்த சீசனில் மட்டும் 5 சதங்களை எடுத்து ஐ.சி.சி. ஒரு நாள் தர வரிசையில் அவர் முதலிடத்தை பிடித்தார்.

பிறகு 272 ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்ததன் மூலம் குறைந்த ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்தவர் என்ற உலக சாதனையை நிகழ்த்தினார் கங்கூலி.டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை அவரது பங்களிப்பு அவரது தலைமையின் கீழ் அபாரமாக இருந்தது. மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரிலிருந்து தன் பேட்டிங்கிற்கு புதிய பரிமாணம் அளித்த கங்கூலி, அங்கிருந்து தொடங்கி, 2002 இங்கிலாந்து தொடரில் அபாரமான இரண்டு அரை சதங்களுக்கு பிறகு ஒரு டெஸ்ட் சதத்தை எடுத்தார். இந்திய அணி டெஸ்ட் தொடரில் 0- 1 என்று பின் தங்கியிருந்தபோது லீட்சில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இவர் அடித்த 138 ரன்களும், சச்சினுடன் சேர்ந்து எடுத்த 200-க்கும் அதிகமான ரன்களும் இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்றது.
பிறகு 2003 உலகக் கோப்பை போட்டிகளில் 3 சதங்களை அடித்தார். 2004ஆம் ஆண்டு புகழ் பெற்ற ஆஸ்ட்ரேலிய தொடரில் பிரிஸ்பேனில் அவர் அடித்த 144 ரன்கள் அணியின் உத்வேகத்தை அதிகரித்து. அந்த தொடரில் ஆஸ்ட்ரேலியாவை இந்தியா தன் பேட்டிங்கின் மூலம் வறுத்து எடுத்தது நம் அனைவரின் நினைவையும் விட்டு அகலாதது.
ஒரு நாள் போட்டிகளில் 22 சதங்களையும் 72 அரைசதங்களையும் 41.02 என்ற சராசரியிலும், டெஸ்ட் போட்டிகளில் 113 டெஸ்ட் 7212 ரன்கள் சராசரி 42.17 என்றும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 40திற்கும் மேற்பட்ட சராசரியை வைத்திருக்கும் உயர்வான நிலையில் அவர் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.
அவரது பேட்டிங் திறன் மீது கடுமையாக விமர்சனம் வைத்த கிரேக் சாப்பல் முதல் தொடங்கி நம் பிஷன் சிங் பேடி வரையிலும், 2006 ஆம் ஆண்டு அணிக்கு மீண்டும் அவர் நுழைந்த பிறகு ஆடிய விதத்தில் நிச்சயம் குறைகாண இடமில்லை. இந்த காலக்கட்டத்தில் கங்கூலியின் சராசரி 60 ரன்களுக்கு அருகில் உள்ளது என்பதும், இதே காலக் கட்டத்தில் அணியின் மற்ற வீரர்களின் சராசரி இவருக்கு அருகில் இல்லை என்பதும் இவரது பேட்டிங் பற்றி விமர்சனம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதை நிரூபித்துள்ளது.
இந்தியாவின் சிறந்த அணித் தலைவர் கங்கூலி
1998ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் ஒரு பெரிய சரிவை சந்தித்து வந்தது. சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் கிரிக்கெட் உலகை ஆட்ட நிர்ணய சூதாட்டங்கள் உலுக்கி வந்தன. இந்திய கிரிக்கெட்டையும் அது பிடித்து உலுக்கிவந்தது. அரசல் புரசலாக அசாருத்தீன் மேல் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் சச்சின் டெண்டுல்கரால் ஆஸ்ட்ரேலிய தொடரில் அவர் நீக்கப்பெற்றார்.
இவருடன் விக்கெட் கீப்பர் நயன் மோங்கியாவும் நீக்கப்பட்டார். கபில்தேவ் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அணியில் கர்நாடக மாநில வீரர்கள் மட்டும் 8 பேர் இருந்தனர். சச்சின், கங்கூலி கனிட்கர் தவிர அனைவரும் கர்நாடகா வீரர்கள். அந்த டெஸ்ட் தொடரை இந்தியா 0-3 என்று தோற்றது. உடனேயே தென் ஆப்பிரிக்க அணி இங்கு வந்தது, சச்சின் டெண்டுல்கர் முதல் டெஸ்டை தோற்றவுடன் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்தார். இருப்பினும் அடுத்த டெஸ்ட் போட்டி வரை அணித் தலைமையில் நீடித்தார். அந்த டெஸ்டிலும் இந்தியா தோல்வி. தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளை இந்தியா தோற்றது.
அடுத்தடுத்து தோல்விகள், 2000ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் ஹேன்சி குரோனியே, மொஹமது ஆசாருதீன், சலீம் மாலிக் பற்றி கிரிக்கெட் சூதாட்டப் புகாரை எழுப்பி, தான் அதில் சிக்கி சின்னா பின்னமானதையும் வெளியிட்டதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அணிச்சேர்க்கையும் பலமாக இல்லை. கிரிக்கெட் ஊழலில் சிக்கி இந்திய அணியின் பெயருக்கும் இழுக்கு ஏற்பட்டது. சச்சின் டெண்டுல்கர் வெறுப்பின் உச்சத்தில் இருந்தார். கபில்தேவ் பயிற்சியாளர் பொறுப்பை ராஜினாமா செய்தார். பேட்ஸ்மென்கள், பந்து வீச்சாளர்கள் தன்னம்பிக்கை இழந்து நின்றனர். இந்த ஒரு பெருங்குழப்ப நிலையில் கங்கூலி தலையில் இந்த பொறுப்பு சுமத்தப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரை அவர் கைப்பற்றினாலும் இந்த குற்றச்சாட்டுக்கள் இந்தியாவை நிலைகுலையச் செய்தன. சவால்களை சந்திக்கத் துணிந்தார் கங்கூலி.
புதிய பயிற்சியாளர் ஜான் ரைட் பொறுப்பேற்றார். ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் கென்யாவில் நடைபெற்றன. கங்கூலி தலைமையில் அதன் இறுதிப்போட்டிக்குள் இந்தியா நுழைந்தது. முதல் போட்டியிலேயே ஆஸ்ட்ரேலிய அணியை வீழ்த்தி கங்கூலி தன் தலைமைப் பொறுப்பு வருகையை உலகிற்கு அறிவித்தார். அந்தப் போட்டியில்தான் ஜாகிர் கானையும், யுவ்ராஜ் சிங்கையும் கங்கூலி அறிமுகம் செய்கிறார்.
அதன் பிறகே ஸ்டீவ் வாஹ் தலைமையில் புத்துணர்வு பெற்ற அதிரடி ஆஸ்ட்ரேலிய அணி இந்தியாவிற்கு தன் 16 டெஸ்ட் போட்டிகள் தொடர் வெற்றியுடன் வருகை தருகிறது.
தொடர்ச்சியான 17ஆவது டெஸ்டையும் ஸ்டீவ் வாஹ் தலமையின் கீழ் ஆஸ்ட்ரேலியா மும்பை வெற்றி மூலம் பெற்றது. கொல்கத்தாவில் துவங்கியது, அதாவது ஆஸ்ட்ரேலியாவிற்கு இன்று நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதனை துவங்கி வைத்தது கங்கூலிதான், அது கொல்கத்தா டெஸ்டிலிருந்து துவங்குகிறது. ஃபாலோ ஆன் ஆடினாலும், அடித்து ஆடுமாறு கூறிய கங்கூலியின் அணுகுமுறையால் லக்ஷ்மணும், திராவிடும் உலக சாதனை ரன் குவிப்பில் ஈடுபட்டு அதன் பிறகு சரியான நேரத்தில் டிக்ளேர் செய்து, ஹர்பனை வைத்து ஆஸ்ட்ரேலியாவின் தொடர் வெற்றி சாதனைக் கனவுகளை தகர்த்தவுடன் கங்கூலியைக் கண்டு உலக அணிகள் அஞ்சத் துவங்கின. பிறகு சென்னையில் வெற்றி. தொடரை ஆஸி. தோற்றதை இன்னமும் ஸ்டீவ் வாஹ் நம்பியிருக்க மாட்டார்.
அதன் பிறகு அயல் நாட்டுத் தொடர்கள் தொடங்கின. இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டது, இதில் ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா போன்றவர்களை வைத்து ஒரு டெஸ்ட் போட்டியை வென்றார் கங்கூலி இந்தியா முன்னிலை பெற்றது. அப்போது அதுவே பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது.
அயல் நாட்டில் வெற்றிபெறும் ஒரு கேப்டன் கிடைத்து விட்டார் என்பதாகத்தான் அப்போது அந்த வெற்றி இருந்தது. ஆனால்

இல்லம்
தள விவரம்
வாசகர் கருத்து
விளம்பரம்
தொடர்புகளுக்கு